/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வாழ்வின் இறுதி வரை கற்றல் இருக்க வேண்டும்'
/
'வாழ்வின் இறுதி வரை கற்றல் இருக்க வேண்டும்'
ADDED : ஜன 22, 2025 12:28 AM

கோவை; ஜி.ஆர்.ஜி., கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தினவிழா, பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரி வளாகத்தில், நேற்று நடந்தது.
விழாவில், பெங்களூரு வோல்வோ குழும நிர்வாக இயக்குனர் கமல் பாலி பேசியதாவது:
பெண்களுக்குள் ஒரு நெருப்பு எப்போதும் இருக்க வேண்டும். மற்றொருவர் செய்வதையே நீங்களும் செய்யக்கூடாது. நம் முன் பல்வேறு சவால்கள் உள்ளன. அவற்றை வென்று தலைவராக வேண்டும். செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல், தானியங்கி தொழில்நுட்பங்களில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் கல்லுாரியுடன், கற்பதை நிறுத்தி விடக்கூடாது. வாழ்வின் இறுதி வரை கற்றல் இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி வரவேற்றார். விழாவில், சந்திர காந்தி நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது சக்தி மசாலா இயக்குனர் சாந்தி துரைசாமிக்கு வழங்கப்பட்டது. ஜி.ஆர்.ஜி., நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருது, கங்கா மருத்துவமனை இயக்குனர் ராஜசேகரனுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஜி.ஆர்.ஜி., லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை மையம் துவக்கி வைக்கப்பட்டது. கோவை ஸ்ரீ அன்னபூர்ணா கவுரிசங்கர் ஓட்டல்கள் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், சக்தி மசாலா நிறுவனர் துரைசாமி, ஜி.ஆர்.ஜி., அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் நந்தினி ரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.