/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிப்பில் குறைபாடுள்ள 1,000 மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி! ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடத்தில் சிறப்பு கவனம்
/
படிப்பில் குறைபாடுள்ள 1,000 மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி! ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடத்தில் சிறப்பு கவனம்
படிப்பில் குறைபாடுள்ள 1,000 மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி! ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடத்தில் சிறப்பு கவனம்
படிப்பில் குறைபாடுள்ள 1,000 மாணவர்களுக்கு கற்றல் திறன் பயிற்சி! ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடத்தில் சிறப்பு கவனம்
ADDED : ஆக 05, 2025 10:45 PM

மேட்டுப்பாளையம்; காரமடை கல்வி வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உள்ள 1,000 மாணவ, மாணவிகள் கணடறியப்பட்டு, அவர்களுக்கு ஆசிரியர்கள் வாயிலாக ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட காரமடை கல்வி வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் 144 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கற்றல் குறைப்பாடு உள்ளதா என கண்டறிய கடந்த மாதம் 24ம் தேதி தமிழக அரசின் வழிக்காட்டுதல் படி இதற்கான சிறப்பு தேர்வு வைக்கப்பட்டது.
இதில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் ஒவ்வொரு பள்ளியிலும் குறைவான மதிப்பெண் பெற்ற 40 சதவீதம் மாணவ, மாணவிகள் கண்டறியப்பட்டனர்.
இவர்களுக்கு பள்ளி நாட்களில் இந்த பாடப்பிரிவுகளில் சிறப்பு வகுப்புகள் எடுக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கற்றல் குறைபாடு உள்ள 1,000 மாணவ, மாணவிகளுக்கு தற்போது திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, காரமடை வட்டார வள மைய ஆசிரியர் மற்றும் பயிற்றுநர் சுரேஷ் கூறியதாவது:- ஒவ்வொரு பள்ளியிலும் கற்றல் குறைப்பாடு உள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் படி ஆங்கிலம், தமிழ், கணக்கு பாடங்களில் வகுப்புகள் எடுப்பதற்கும், அதில் உள்ள நுட்பங்களை சொல்லி தருவதற்கும் ஒரு பாடத்திற்கும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு நான்கரை மணி நேரம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 30 நாட்களுக்கு மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படும்.
அதன் பின் மீண்டும் அவர்களுக்கு தேர்வு வைத்து கற்றல் திறன் சோதிக்கப்படும். அதில் எந்த பாடத்தில் அவர்கள் மதிப்பெண்கள் குறைவாக பெறுகிறார்கள் அந்த பாடத்தில் 20 வாரம் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
இதனால் அரசு பள்ளியில் உள்ள எந்த மாணவர்களுக்கும் கற்றல் குறைபாடு இருக்காது. தமிழக அரசின் துணை முதல்வர் இதற்காக இந்த திறன் பயிற்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
காரமடை கல்வி வட்டாரத்தில் கடந்த 1ம் தேதி முதல் திறன் பயிற்சி வகுப்பு துவங்கி நடந்து வருகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.-------