/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்களுக்கு லீவு விசைத்தறிகளுக்கு ஓய்வு
/
தொழிலாளர்களுக்கு லீவு விசைத்தறிகளுக்கு ஓய்வு
ADDED : ஜன 18, 2025 12:11 AM
சோமனுார்,; பொங்கல் பண்டிகைக்கு தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், விசைத்தறிகள் ஓய்வில் உள்ளன.
கோவை,திருப்பூர் மாவட்டத்தில், விசைத்தறி நெசவு பிரதானமாக உள்ளது. ஓய்வின்றி, 24 மணி நேரமும் இம்மாவட்டங்களில் விசைத்தறிகள் இயங்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
தொழிலாளர்களும் சுழற்சி முறையில் பணியாற்றுவர். கடந்த இரு நாட்களுக்கு முன், பொங்கல் பண்டிகைக்காக விசைத்தறி குடோன்களுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
இதனால், கருமத்தம்பட்டி, சோமனுார் சுற்றுவட்டாரத்தில் விசைத்தறி குடோன்கள் ஓசையின்றி உள்ளன.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், 'ஊருக்கு சென்ற தொழிலாளர் திரும்பினால் தான் விசைத்தறிகள் முழுமையாக இயங்கத் துவங்கும். பொங்கல் முடிந்ததால், நாங்களே விசைத்தறிகளை இயக்க முடிவு செய்துள்ளோம்,' என்றனர்.
தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், வியாபாரம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான கடைகளும் பூட்டப்பட்டிருக்கின்றன. ரோட்டில் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே உள்ளது.