/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லூரியில் சொற்பொழிவு; வென்ற மாணவர்களுக்கு பரிசு
/
கல்லூரியில் சொற்பொழிவு; வென்ற மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 28, 2025 05:44 AM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, என்.ஜி.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கனகவேல் நினைவு அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மாணிக்கசெழியன் வரவேற்றார்.
கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், ''மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தானும் முன்னேறி, சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும்,'' என்றார்.
கோவை பி.எஸ்.ஜி. துவக்கப்பள்ளி ஆசிரியர் சிவசக்தி வடிவேல், கண்ணதாசனின் கவிப்புலமை, சொல்வளம், சிந்தனை பாங்கு, தத்துவம் குறித்தும், அவரின் பாடல்களை மேற்கோள்காட்டி உரையாற்றினார். கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 1,500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கனகவேல் அறக்கட்டளை சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் நடந்த பேச்சு, கவிதை, கட்டுரை, சதுரங்கம், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக, 5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக, 3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 62 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகையாக தமிழ் இலக்கியம் பயிலும், 5 மாணவர்களுக்கு, 40,100 ரூபாய் வழங்கப்பட்டது.