ADDED : ஜூலை 08, 2026 07:41 AM
அ நிறம் | அளவு
கோவை: திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில் திருக்குறள் ஆய்வாளர் கணேசனின், 'திருக்குறள் பார்வையில் இல்லறமே நல்லறம்' எனும் சிறப்பு சொற்பொழிவு வரும் ஞாயிறன்று நடக்கிறது.
ராம்நகர் கோதண்ட ராமர் கோயில் ஸ்ரீமத் அபிநவ வித்யாதீர்த்த பிரவசன மண்டபத்தில் வரும் 11 மாலை 4:30 முதல் 7 மணி வரை சொற் பொழிவு நடக்கிறது.
இல்லறம், அதன் நோக்கம், கடைபிடிக்க வேண்டிய மாண்புகள், நல்லறமாக மாற்றுவது எப்படி, நல்லறத்தின் வாயிலாக வரும் நன்மைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்கிறார்.
இதில் பொதுமக்கள் பங்கேற்க கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் நாகசுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
