/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ேஹாட்டல் மேலாளர்களுக்கு சட்ட விளக்க கூட்டம்
/
ேஹாட்டல் மேலாளர்களுக்கு சட்ட விளக்க கூட்டம்
ADDED : அக் 16, 2025 08:52 PM
கோவை: கோவையிலுள்ள ேஹாட்டல்களில் வெளிநாட்டினர் தங்குவது தொடர்பான சட்டம் குறித்து விளக்க கூட்டம் நடந்தது.
கோவை மாநகர காவல்துறை சார்பில், 'குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம்-2025' குறித்து விளக்க கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் தலைமை தாங்கினார்.
தங்கும் விடுதி மற்றும் ேஹாட்டல்களில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள், வெளிநாட்டினர் வருகை புரிந்தால், அவர்களிடமிருந்து பெறப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் அவற்றை பதிவேற்றம் செய்தல், வெளிநாட்டினர் வருகை குறித்து காவல்துறைக்கு படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் குறித்து விளக்கப்பட்டது.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்து, மற்றும் வழிகாட்டுதலுக்கு எதிராக விதிமீறுவோர் மீது சட்டப்பூர்வமாக எடுக்கப்படும் நடவடிக்கை, தண்டனை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது . கூட்டத்தில், கோவை மாநகர எல்லைக்கு உட்டபட்ட பகுதிகளில் செயல்படும் ேஹாட்டல்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள், மேலாளர்கள் பங்கேற்றனர்.