தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 5 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை

5 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை

5 வயது சிறுமியை கவ்வி சென்ற சிறுத்தை


ADDED : ஜூன் 21, 2025 02:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 02:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை:வால்பாறை அருகே, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமியை, சிறுத்தை கவ்வி சென்றது.

வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் தேயிலை தோட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்துடன் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கின்றனர்.

இந்நிலையில், தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த, அவர்களது ஐந்து வயது மகள் ரோஸ்லிகுமாரியை, சிறுத்தை கவ்விச் சென்றது.

சிறுமியில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர் ஓடி வருவதற்குள், வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்து சென்றது. சிறிது தூரத்தில் சிறுமியின் ஆடைகள் மட்டும் கிடைத்தது. சிறுமியை தேடும் பணியில் வனத்துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் சிறுமியின் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us