ADDED : அக் 01, 2024 11:55 PM
அ நிறம் | அளவு
அன்னுார் : அன்னூர், கோவை சாலையில், எல்லப்பாளையம், பவர் ஹவுஸில், நான்கு நாட்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் வனத்துறையினர், புதர்கள், மரங்கள் அதிக அளவில் உள்ள எல்லப்பாளையம் ஆவாரம் குளத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு நாய் அதிகாலையில் சத்தமிட்டபடி இருந்தது. காலையில் நாயை காணவில்லை. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நேற்றுமுன்தினம் பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரும், அன்னூர் போலீசாரும், எல்லப்பாளையத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.
