ADDED : பிப் 16, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: மதுக்கரை வன சரகத்தில் நவக்கரை பிரிவு, மொடமாத்தி சுற்றுக்குட்பட்ட போளுவமம்பட்டி வனப்பகுதி உள்ளது.
இவ்வனப்பகுதியிலிருந்து சுமார், 700 மீட்டர் தொலைவில் தனியாருக்கு சொந்தமான தோட்டம், சுற்றிலும் முள் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று இங்கு சிறுத்தை ஒன்று கம்பியில் சிக்கி இறந்து கிடந்தது.
தகவலறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையின் உடலை மீட்டனர். உடற்கூறாய்வில், இறந்தது 2 வயதான, பெண் சிறுத்தை என தெரிந்தது.
கம்பி வேலியிலிருந்து வெளியே வர முயன்றபோது, உடலின் பின் பகுதியில் அதிக காயமேற்பட்டு உயிரிழந்ததும் தெரிய வந்தது.
