/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேமரா பொருத்தியாச்சு சிக்கி விடும் சிறுத்தை
/
கேமரா பொருத்தியாச்சு சிக்கி விடும் சிறுத்தை
ADDED : டிச 30, 2025 05:16 AM
காரமடை: காரமடை அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க, கேமரா பொருத்தப்பட்டது.
காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளியங்காடு, ஆதிமாதையனூர், தோலம்பாளையம், சீலியூர் உள்ளிட்ட பகுதிகளில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அண்மையில் சீலியூர் பகுதியில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை சிறுத்தை வேட்டையாடியது.இதையடுத்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க காரமடை வனப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டது.
காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''தோகை மலை அடிவார பகுதியில் இருந்து சிறுத்தை வெளியே வருகிறது. அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தையின் வழித்தடம் அறிந்து, கூண்டு வைத்து பிடிப்போம், என்றார். ---

