ADDED : மார் 13, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கராயன் மலையடிவாரத்தில், சிறுத்தை, வெள்ளாடு தாக்கி கொன்றது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிளிச்சி ஊராட்சி, கக்ராயன் மலையடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் மலையடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் சிறுத்தை நடமாடியது குறித்து அப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் காலை, அப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகளை விவசாயி ஒருவர் ஓட்டிச்சென்றார்.
அப்போது சிறுத்தை தாக்கி கொன்றது. சம்பவம் குறித்து, இப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .
