/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க எதிர்பார்ப்பு
/
சிறுத்தை நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க எதிர்பார்ப்பு
சிறுத்தை நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க எதிர்பார்ப்பு
சிறுத்தை நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 17, 2024 10:00 PM
வால்பாறை; சுற்றுலா நகரமான வால்பாறையில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இது தவிர, நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணியர் அதிக அளவில் தங்கிச்செல்கின்றனர்.
சமீப காலமாக வால்பாறை நகரில், இரவு நேரத்தில் சிறுத்தை உலா வந்து, குடியிருப்பு பகுதியில் உள்ள நாய், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை கவ்விச்செல்கிறது. குறிப்பாக கக்கன்காலனி, நகைக்கடை வீதி, கோ-ஆப்பரெடிவ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நள்ளிரவு நேரத்தில் உலா வருகிறது.
இதனால் உள்ளூர் மக்களுக்கும், சுற்றுலாபயணியருக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் கூறியதாவது:
வால்பாறையில் சமீப காலமாக, சிறுத்தை நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. கடந்த மாதம் ஊசிமலை எஸ்டேட்டில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை கொடூரமான முறையில் கொன்றது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வால்பாறை நகரிலும் சிறுத்தைகள் நடமாடத்துவங்கியுள்ளன. கக்கன்காலனி உத்தரகாளியம்மன் கோவில் எதிரில், பகல் நேரத்தில் குட்டியுடன் சிறுத்தை பாறையில் ஓய்வெடுப்பதை நேரில் பார்த்த மக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் குழந்தைகளை மாலை நேரத்தில் வெளியில் விளையாடக்கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர்.