/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
/
விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : ஜன 09, 2026 06:22 AM
ஆனைமலை: ஆழியாறு அருகே தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்க வேண்டும், என, சப் - கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு வன எல்லையில் உள்ள தோட்டத்தில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் மூர்த்தி கொடுத்த மனுவில், 'ஆழியாறு ஆயக்கட்டு கால்வாய் அருகே, விவசாயம் செய்கிறேன். அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளது.
கடந்த மாதம், 18ம் தேதி சிறுத்தை நடமாட்டத்துக்கான கால்தட பதிவுகள் இருந்தன. நேற்றுமுன்தினம் மீண்டும் கால்தட பதிவுகள் தென்பட்டன. சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

