/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மோத்தேபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்
/
மோத்தேபாளையத்தில் சிறுத்தை நடமாட்டம்
ADDED : நவ 12, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், மோத்தேபாளையம் கிராமத்தில், மோகன்குமார், 47 குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். நாயை காணவில்லை. ஒரு நாள் முழுவதும் தேடியுள்ளனர். பின்பு அவரது வீட்டில் பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவை பார்த்தபோது, இரவு,11:00 மணி அளவில் சிறுத்தை நாயை கவ்வி சென்றது தெரிய வந்தது. இதை அறிந்த கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறுகையில்,சிறுத்தை நடமாட்டம் மோத்தேபாளையம் பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை பிடிப்பதற்கு, இரண்டு நாளில் கூண்டு வைக்கப்படும், என்றார்.

