/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் உலா
/
குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் உலா
ADDED : ஜன 09, 2025 11:28 PM

வால்பாறை, ; வால்பாறை நகரில் நள்ளிரவில் சிறுத்தைகள் ஹாயாக நடந்து சென்றதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை மலைப்பகுதி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஐ.பி.ஏ., சர்ச் நடைபாதையில், நேற்று முன்தினம் இரவு குடியிருப்பு பகுதியில், இரண்டு சிறுத்தைகள் ஹாயாக நடந்து செல்வது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பீதியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதியில் மட்டுமே உலா வந்த சிறுத்தைகள், சமீப காலமாக மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரிலும் உலா வரத்துவங்கியுள்ளன. வாழைத்தோட்டம் மக்களை அச்சுறுத்தும் வகையில், இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தைகளை வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்,'' என்றனர்.

