/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் வட்டாரத்தில் துவங்கியது தொழுநோய் கண்டுபிடிப்பு பணி
/
அன்னுார் வட்டாரத்தில் துவங்கியது தொழுநோய் கண்டுபிடிப்பு பணி
அன்னுார் வட்டாரத்தில் துவங்கியது தொழுநோய் கண்டுபிடிப்பு பணி
அன்னுார் வட்டாரத்தில் துவங்கியது தொழுநோய் கண்டுபிடிப்பு பணி
ADDED : ஜன 22, 2026 05:15 AM
அன்னூர்: தொழுநோய் கண்டு பிடிப்பு பணி, அன்னூர் வட்டாரத்தில் துவங்கியது.
பொது சுகாதாரத் துறை சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக கடந்த 19 முதல் பிப். 6ம் தேதி வரை தன்னார்வலர்கள் வாயிலாக, தொழுநோய் கண்டுபிடிக்கும் பணி நடைபெறுகிறது.
அன்னூர் வட்டாரத்தில், வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தராஜ், மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி, தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
டாக்டர்கள் கூறுகையில், 'உணர்ச்சி இல்லாத வெளிறிய அல்லது சிவந்த படை அல்லது தேமல், தோளில் எண்ணெய் பூசியது போன்ற மினுமினுப்பு, கை,கால்களில் மதமதப்பு ஆகியவை தொழுநோய்க்கான அறிகுறிகள்.
கடந்த ஆகஸ்டில் நடந்த முதற்கட்ட முகாமில், அன்னூர் வட்டாரத்தில் 34,288 வீடுகளில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 296 பேர்களை பரிசோதித்ததில், நான்கு புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
அன்னூர் வட்டாரத்தில் தலா இரண்டு பேர் வீதம் 120 பேர், 60 குழுக்களாக தொழுநோய் கண்டு பிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

