/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் கண்டுபிடிப்பு பணி துவக்கம்
/
தொழுநோய் கண்டுபிடிப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 03, 2025 09:21 PM
அன்னுார்; பொது சுகாதாரத்துறை சார்பில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், ஆக. 1 முதல் 20ம் தேதி வரை, தன்னார்வலர்கள் வாயிலாக, தொழுநோய் கண்டுபிடிப்பு பணி அன்னுார் வட்டாரத்தில் நடைபெறுகிறது.
இதற்காக, 120 பேர் அடங்கிய 60 குழுக்கள், வீடு, வீடாக சென்று பரிசோதனை செய்ய உள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், 'வீடு வீடாக வரும் தன்னார்வலர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி, தங்கள் உடலை பரிசோதித்துக் கொள்ள வேண்டுகிறோம்.
தொழு நோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்னும் மகாத்மாவின் கனவை நனவாக்குவோம். உணர்ச்சி இல்லாத வெளிர்ந்த அல்லது சிவந்த படை அல்லது தேமல் ஆகியவை தொழுநோய்க்கான ஆரம்ப அறிகுறி ஆகும் என்றனர்.