நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: காரமடை வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சுகாதார துறையினர் கூறுகையில், தொழு நோயாளிகளை கண்டறியவும், தொழுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றோம். இதற்காக 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக வீடுகளுக்கு சென்றுள்ளோம்.
அடுத்து காரமடை வட்டாரத்தில் கட்டுமானம் நடைபெறும் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள், உணவுக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரசு அலுவலகங்கள், போன்ற பல்வேறு பகுதிகளில், தொழு நோய் கண்டறியும் முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் நடத்த உள்ளோம், என்றனர்.---

