/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் பரிசோதனை 84 குழுக்கள் அமைப்பு
/
தொழுநோய் பரிசோதனை 84 குழுக்கள் அமைப்பு
ADDED : அக் 22, 2025 09:52 PM
மேட்டுப்பாளையம்: காரமடை வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று தொழுநோய் பரிசோதனையில் நாளை முதல் (24ம் தேதி) ஈடுபட உள்ளனர். இதற்காக 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சுகாதார துறையினர் கூறுகையில், முன்கூட்டியே தொழு நோயாளிகளை கண்டறியவும், தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காரமடை வட்டாரத்தில் கட்டுமானம் நடைபெறும் பகுதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகள், உணவுக் கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்,
தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரசு அலுவலகங்கள், வீடுகள் போன்ற பல்வேறு பகுதிகளில், தொழு நோய் கண்டறியும் முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் வரும் 24ம் தேதி (நாளை) முதல் தொடர்ந்து நடைபெற உள்ளன. இதற்காக 84 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, என்றனர்.
---

