/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் பரிசோதனை துணை இயக்குனர் ஆய்வு: தொழுநோய் பரிசோதனை துணை இயக்குனர் ஆய்வு

ADDED : அக் 29, 2025 12:30 AM
மேட்டுப்பாளையம்: சுகாதாரத்துறை சார்பில், காரமடை வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் வீடுகளுக்கு நேரடியாக சென்று தொழு நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக 83 குழுக்களில் 166 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் நோயாளிகளை கண்டறிய வும், தொழுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். இதில் சிலருக்கு பரிசோதனையின் போது தொழு நோய் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, இப்பணிகளை நேற்று காரமடை அருகே பெரிய குமாரபாளையம் பகுதியில், கோவை மாவட்ட தொழுநோய் துணை இயக்குனர் டாக்டர் சிவகுமாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் சுகாதாரத்துறையினருக்கு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.