/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்போம்! சுற்றுச்சூழல் காக்க துணிப்பை பயன்படுத்துவோம்
/
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்போம்! சுற்றுச்சூழல் காக்க துணிப்பை பயன்படுத்துவோம்
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்போம்! சுற்றுச்சூழல் காக்க துணிப்பை பயன்படுத்துவோம்
மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் தவிர்ப்போம்! சுற்றுச்சூழல் காக்க துணிப்பை பயன்படுத்துவோம்
ADDED : ஏப் 01, 2025 10:05 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து, துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என, பொதுமக்களிடம், தேசிய பசுமைப்படை, சேவாலயம் அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பொருட்கள், உணவுகள் வாங்க பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. மண்ணுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு, விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. ஆனாலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது குறையவில்லை.
இந்நிலையில், பொதுமக்களிடம் துணிப்பை வழங்கி பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், தேசிய பசுமைப்படை மற்றும் சேவாலயம் அறக்கட்டளை அமைப்பினர் ஈடுபட்டனர்.
சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதனிடம், துணிப்பையை சேவாலயம் அறக்கட்டளை தலைவர் மயில்சாமி, பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் வழங்கினர். சேவாலயம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பொதுமக்களிடம் துணிப்பைகள், துண்டுபிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது:
புதுடில்லி சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், தமிழக அரசின் சுற்றுச்சூழல் கல்வி திட்டம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், சேவாலயம் அறக்கட்டளை சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம், என, வலியுறுத்தி துணிப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், பிளாஸ்டிக் ஒரு செயற்கையான கரிம பிசின் ஆகும்; 100 ஆண்டுகளானாலும் மக்காது. பிளாஸ்டிக் கழிவு, ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றை மாசுபடுத்திவிடும்.
பிளாஸ்டிக் கழிவு, வீதிகள், பூங்கா, இயற்கை வளம் நிறைந்த இடங்களை மாசுப்படுத்திவிடும். வனவிலங்குகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் சிதைந்து காற்றில் கலந்து அதன் துகள்கள் உணவு பொருட்களில் கலந்து, மனித உடல்நலத்தை பாதிக்கும். இதனால், மனிதர்களுக்கு கேன்சர் உருவாகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் ஏற்படும் புகை, பருவநிலையில் மாற்றத்தை உருவாக்கிவிடும். இந்த கழிவுகளை அகற்றிட மிகுந்த பொருட்செலவு ஏற்படுகிறது. எனவே, பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துணிப்பைகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு, கூறினார்.

