தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கதாபாத்திரமாகவே மாறி விடுவோம்!

 கதாபாத்திரமாகவே மாறி விடுவோம்!

 கதாபாத்திரமாகவே மாறி விடுவோம்!


ADDED : செப் 26, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''மா ர்கழி மாத பனியில் நின்று, நாடகத்தை ரசித்த ரசிகர் கூட்டம் இன்றில்லை. அவர்களுக்கு ரசிக்க வேறு பொழுதுபோக்குகள் வந்துவிட்டன. ஆனால் கலைஞனுக்கு மேடை தானே எல்லாமே,'' என, கண்களை சுருக்கியபடி பேசினார், கோவை கலாலயம் நாடகக்குழு தலைவர் ஜெகன்.

தன் குழுவினரை அறிமுகப்படுத்திய பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

''1981ல் கோவை கலாலயத்தை, நாடக இயக்குனர் கல்யாண்ஜியுடன் இணைந்து துவக்கினேன். தற்போது இக்குழுவிற்கு 45 வயது. எங்களை போல சில நாடக குழுக்கள் இன்னும் இயங்க காரணம், இதை ரசிக்கும் வெகுசில ரசிகர்களுக்காக தான்'' என்றார்.

இடையில் குறுக்கிட்ட நாடக கலைஞர் சாந்தி, '' நான் ஐந்து வயதில் இருந்து நடிக்கிறேன். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு கதையும், கதாபாத்திரமும் இன்னும் நினைவிருக்கிறது. மேடை ஏறினால், அக்கதாபாத்திரமாகவே மாறிவிடுவோம்.

அரங்கமே நிசப்தமாகி, கைத்தட்டல் சத்தத்திற்கு பிறகு சுதாரித்து பழைய நிலைக்கு திரும்பிய, பல கதாபாத்திரங்கள் இருக்கின்றன. எனக்கு மேடை தான் உயிர்மூச்சு,''

- கண்களில் தெரிந்தது அவரது அர்ப்பணிப்பு.

ஓடிடி, சோசியல் மீடியா என கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட காலத்திலும், மேடை தேடி, கலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் கலைஞர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நலிந்த கலைஞர்களை மக்கள் மட்டுமின்றி, அரசும் கைதுாக்கி விட வேண்டும்.

அரசிடம் எதிர்பார்ப்பது இதுதான்! தற்போது கலை பண்பாட்டுத்துறை, பதிவு செய்த நலிந்த கலைஞர்களுக்கு, மாதம் 3 ஆயிரம் பென்ஷன் வழங்குகிறது. இதை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும். இலவச பஸ் பாஸ் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். மேடை கிடைக்காமல் பல நாடகக்குழுக்கள் தவிக்கின்றன. மாநகராட்சி கலையரங்கில், இலவசமாக நாடகம் போட அனுமதி அளிக்க வேண்டும். --- ஜெகன், தலைவர், கோவை கலாலயம் நாடக குழு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us