ADDED : செப் 26, 2026 04:55 AM

கை யில் அணியும் வாட்ச், ஆபரணம் போல மாறிவிட்டது. வழக்கமான வாட்ச் டிசைனில் இருந்து மாறுபட்டு குந்தன், முத்துக்கள், கிரிஸ்டல்கள் மற்றும் பல கற்கள் கொண்டு இந்த அலங்காரக் கடிகாரங்கள் கையால் வடிவமைக்கப்படுகின்றன.
சிறிய டயல், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள் நிறைந்த கனமான பெல்ட் என, பிரேஸ்லெட் அணிந்திருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. பட்டு புடவைகள் என பல ஆடைகளுடன் அணியும் போது கிராண்ட் லுக் தருகிறது.
இதன் விலை ரூ. 1000 முதல் 3000 வரை. மொய்சனைட் குந்தன், மீனாகாரி வேலைப்பாடு, ரத்தினங்கள் கொண்ட கனமான மாடல்கள் ரூ. 5000 முதல் கிடைக்கின்றன.
மும்பையில் இருந்து இந்த வகையான நகைகளை, கிருஷ்ணா என்பவர் தமிழகத்தில் விற்பனை செய்து வருகிறார்.
வாட்ச்கள் மட்டுமின்றி டாலர், செயின், வளையல் போன்ற பல ஆபரணங்களையும் வடிவமைத்து வருகிறார் இவர்.
தொடர்புக்கு: 91370 95789
இன்ஸ்டாகிராம்: krishna_art_jewellery
