/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுப்போடுவோம்! வாக்காளர்கள் உறுதியேற்று கையெழுத்து
/
தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுப்போடுவோம்! வாக்காளர்கள் உறுதியேற்று கையெழுத்து
தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுப்போடுவோம்! வாக்காளர்கள் உறுதியேற்று கையெழுத்து
தேர்தலில் கண்டிப்பாக ஓட்டுப்போடுவோம்! வாக்காளர்கள் உறுதியேற்று கையெழுத்து
ADDED : மார் 15, 2024 11:45 PM

கோவை:லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
லோக்சபா தேர்தல் தேதி, இன்று (16ம் தேதி) பிற்பகல், 3:00 மணிக்கு அறிவிக்கப்படும் என, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
தேதி அறிவித்ததும் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். மாவட்ட தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டுக்கு கீழ், அனைத்து அரசு துறைகளும் செயல்படும்.
கோவை மாவட்டத்தில், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதகதியில் செய்யப்பட்டு வருகின்றன.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், 'விவி பேட்' இயந்திரங்கள், பேட்டரி, ரசீதுக்கான பேப்பர் ரோல் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், 'ஸ்ட்ராங்' ரூமில் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணி நடந்து வருகிறது.
2014 தேர்தலில் பதிவான ஒட்டுப்பதிவு சதவீதத்தை, 2019 தேர்தலுடன் ஒப்பிட்டால், 4.33 சதவீதம் குறைந்திருந்தது. மொத்த வாக்காளர்களில், 12.50 லட்சம் வாக்காளர்களே ஓட்டளித்திருந்தனர்.
7.08 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி பக்கம் எட்டிப்பார்க்கவே இல்லை. மொத்தம், 63.84 சதவீத ஓட்டுகளே பதிவாகியிருந்தது.
அதனால், ஓட்டுப்பதிவை அதிகரிக்கச் செய்வதற்காக, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
ஓட்டுப்போட வேண்டிய அவசியம் குறித்து, கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், தேசிய விருதாளரான மாற்றுத்திறனாளி ஸ்வர்ணா, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோர் பேசிய வீடியோக்கள் வெளியிடப்பட்டன.
தொகுதிக்கு ஒன்று வீதம், 10 வாகனங்கள் தருவிக்கப்பட்டு, விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் கூடுமிடங்களில், 'செல்பி பாயின்ட்' வைக்கப்பட்டு உள்ளது.
நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக, வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கும் வகையில், கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
'ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள, இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்தவொரு ஜாதி, மதம், இனம், வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டுக்கு ஆட்படாமல், எதிர்வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்போம்' என உறுதிமொழிகிறோம் என்பதை ஏற்று, கையெழுத்திட்டுச் செல்கின்றனர்.
இவ்வியக்கத்தை, கலெக் டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்துக்கு வருவோர், ஆர்வமுடன் கையெழுத்திடுகின்றனர்.

