/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளாஸ்டிக் கழிவை எதிர்த்து போராடுவோம்! உலக சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் கழிவை எதிர்த்து போராடுவோம்! உலக சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கழிவை எதிர்த்து போராடுவோம்! உலக சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வு
பிளாஸ்டிக் கழிவை எதிர்த்து போராடுவோம்! உலக சுற்றுச்சூழல் தினத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 04, 2025 08:46 PM

ஆனைமலை; 'பிளாஸ்டிக் கழிவை எதிர்த்து போராடுவோம்,' என, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியின் தேசியபசுமைப்படை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 'பிளாஸ்டிக் கழிவை எதிர்த்து போராடுவோம்,' என விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் கிட்டுசாமி, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்தார். உதவி தலைமையாசிரியர் பூவிழி, பிளாஸ்டிக் பயன்பாட்டை மாணவர்கள் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தினார். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் மற்றும் மாணவர்கள், ரெட்டியாரூரில் மக்களிடம், 'வேண்டாம், வேண்டாம் பிளாஸ்டிக் வேண்டாம்' என்ற கோஷத்துடன், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மாணவர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் மாசு, நாம் குடிக்கும் தண்ணீரில், உண்ணும் உணவில் கொஞ்சம், கொஞ்சமாக உடம்புக்குள் சென்றுவிடுகிறது. ஆறு, ஏரி, குளம் மற்றும் கடலில் கிட்டத்தட்ட, 11 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு சென்று சேர்வதால், நீர்வாழ் உயிரினங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன.
மனிதர்களுக்கு மலட்டுத்தன்மை, ஹார்மோன் கோளாறு, நரம்பு மண்டலம் பாதிப்பு, சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. ஆடு, மாடு, நாய் மற்றும் விலங்குகள், நீர் வாழ் உயிரினங்கள் நெகிழியுடன் உணவு சேர்த்து உண்ணும்போது இறக்கின்றன.
மண் வளத்தை கெடுத்து, நீர் நிலைகளை மாசுபடுத்தி, சாக்கடைகள் அடைத்து பேராபத்துக்கு பிளாஸ்டிக் வழிவகுக்கிறது. எனவே, பிளாஸ்டிக்குக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்.
கடைகளுக்கு உணவுப்பொருட்கள் வாங்க செல்லும் போது துணிப்பை, பாத்திரங்களை எடுத்து செல்வோம். நம்முடன் மொபைல்போன் இருப்பது போல, துணிப்பையும் வைத்து இருப்போம்.
திடக்கழிவை, மக்கும், மக்காத கழிவு என பிரித்து மறு சுழற்சி செய்ய கொடுக்க வேண்டும். நீர் நிலையில் கழிவை கொட்டக்கூடாது. இவ்வாறு, வலியுறுத்தினர்.
உறுதியேற்போம்!
பொள்ளாச்சி தேசிய பசுமைப்படை சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளதுடன், உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசியபசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் கூறியதாவது:
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்; காடுகள் மற்றும் பல்லுயிர் தன்மையை பாதுகாப்பேன். நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுப்பேன். பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டேன்; புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன், குப்பையை பொது இடங்களில் போட மாட்டேன், மின்சாரத்தை சேமிப்பேன்.
எரிபொருள் வாகன பயன்பாட்டை குறைப்பேன், தண்ணீரை வீணாக்கமாட்டேன், சுற்றுச்சூழல் மீது அக்கறையுடன் இருப்பேன் என, உறுதிமொழி எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.