தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொகுதி அறிவோம் - கிணத்துக்கடவு

 தொகுதி அறிவோம் - கிணத்துக்கடவு

 தொகுதி அறிவோம் - கிணத்துக்கடவு


ADDED : மார் 30, 2026 06:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு சட்டசபை தொகுதியில், குறிச்சி நகராட்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை, வெள்ளலூர், எட்டிமடை, திருமலையம்பாளையம், ஒத்தக்கால்மண்டபம், செட்டிபாளையம் ஆகிய, 7 பேரூராட்சிகளும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள சொக்கனூர், பொட்டையாண்டிபுறம்பு, வடபுதூர், சொலவம்பாளையம், குதிரையாலம்பாளையம், நெ.10.முத்தூர், கோடங்கிபாளையம் என, 7 ஊராட்சிகளும் உள்ளன.

இதேபோன்று, கோவை தெற்கு பகுதியில், மாதம்பட்டி, தீத்திபாளையம், பேரூர், செட்டிபாளையம், மாவுதம்பதி, பிச்சனூர், பாலத்துறை, சீரபாளையம், மலுமிச்சம்பட்டி, மயிலேறிபாளையம், நாச்சிபாளையம், அரிசிபாளையம், வழுக்குப்பாறை என, 13 ஊராட்சிகளும் உள்ளன.

கோவை மாநகராட்சியின், 94 முதல் 100 வார்டுகள் வரை உள்ளன. சிட்கோ தொழிற்பேட்டை, தனியார் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் இங்கு அதிகமுள்ளன. கிணத்துக்கடவு பேரூராட்சியில் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது.

கிணத்துக்கடவு தொகுதியில், கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கல்குவாரி மற்றும் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மற்ற பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் அமைந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆண்கள் --- 1,44,562, பெண்கள் --- 1,55,888, மூன்றாம் பாலினம் - - 36 என, மொத்தம், 3,00,486 வாக்காளர்கள் உள்ளன. இங்கு அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள்.

1967 முதல் 2021 வரை நடந்த, 13 சட்டசபை தேர்தலில், தி.மு.க., 4 முறையும், அ.தி.மு.க., 9 முறையும் வென்றுள்ளது. 2001 முதல் தற்போது வரை தொடர்ந்து 5 முறை அ.தி.மு.க., வென்றுள்ளது. இதில், 2001, 2006, 2011 மற்றும் 2021 என, 4 முறை தாமோதரன் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2021 தேர்தலில் 1,095 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஸ்.ஐ.ஆர். வந்த பின், இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 23,659 பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை, மீண்டும் அ.தி.மு.க. சார்பில் தாமோதரன் போட்டியிடுகிறார். தி.மு.க., சார்பில் சபரி கார்த்திகேயன் போட்டியிடுகிறார். த.வெ.க., சார்பில் விக்னேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் பானுப்பிரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கிணத்துக்கடவு தொகுதியில், 1977, 1980, 1984 தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் கே.வி.கந்தசாமி வெற்றி பெற்றார். அவர், 1989ல் அ.தி.மு.க. ஜானகி அணியிலும், 2001ல் சுயேட்சையாகவும், 2006ல் தி.மு.க., சார்பிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரின் பேரன் சபரி கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதல் முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவுவது நிச்சயம். எப்படியாவது ஜெயித்து விட வேண்டும் என, தி.மு.க. பல்வேறு வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ., கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு அணியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பா.ஜ.,வுக்கு கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால், அ.தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி குறைய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, 25 ஆண்டுகள் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வரும் கிணத்துக்கடவை விட்டுவிடக் கூடாது என, அக்கட்சியினர் கவனத்துடன் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த முறை போட்டிக்கு த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் ரேஸில் உள்ளன. அதனால் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பது கடினம். இவர்களில் யார் வெற்றி வாகை சூடப்போகிறார் என்பதை அறிய மக்கள் ஆர்வத்தில் உள்ளார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us