தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொகுதி அறிவோம் தொண்டாமுத்தூர்

 தொகுதி அறிவோம் தொண்டாமுத்தூர்

 தொகுதி அறிவோம் தொண்டாமுத்தூர்


ADDED : மார் 28, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 10:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதியில், தொண்டாமுத்தூர், தாளியூர், வேடபட்டி, பூலுவபட்டி, ஆலாந்துறை, தென்கரை, பேரூர் ஆகிய ஏழு பேரூராட்சிகளும், தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள தேவராயபுரம், தென்னமநல்லூர், வெள்ளிமலைபட்டிணம், நரசீபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், இக்கரைபோளுவாம்பட்டி, மத்வராயபுரம் ஆகிய ஏழு ஊராட்சிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், குனியமுத்தூர், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளும் உள்ளன.

தொகுதியில், நகர் மற்றும் புறநகர் பகுதிகள் சரிசமமாக உள்ளன. ஆர்.எஸ்.புரம், கோவையின் முக்கிய பகுதிகளில் ஒன்று. இங்கு, தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாகவும், அதற்கு அடுத்தப்படியாக, பாக்கு வியாபாரம், கட்டுமான தொழில் உள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆண்கள் : 1,38,968, பெண்கள்: 1,48,371, மூன்றாம் பாலினம் 103. மொத்தம்: 2,87,442. கொங்கு வேளாளர், ஒக்கலிகர், செட்டியார், அருந்ததியர் என, பல சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். துவக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 1977 முதல் 11 தேர்தலில், அ.தி.மு.க., 7 முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.கா. மற்றும் ம.தி.மு.க. தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க.வும் ஒரு முறை, அதன் கூட்டணியில் இருந்த மா.கம்யூ. ஒரு முறை வென்றுள்ளது.

2008ம் ஆண்டு தொகுதி வரையறை செய்யப்பட்டதில் பேரூர் தொகுதி நீக்கப்பட்டு, தொண்டாமுத்தூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. 2006ல், பேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வேலுமணி, 2011 முதல் தொண்டாமுத்தூர் தொகுதியில், போட்டியிட துவங்கினார். 2011, 16, 21 என மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தும், 2024 லோக்சபா தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெற்றார். வேலுமணி, நான்காவது முறையாக போட்டியிடுகிறார். தி.மு.க.வில் செந்தில் கார்த்திகேயன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நா.த.க. வேட்பாளர் ரஜபுநிஷா. த.வெ.க.வில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.ராஜூவின் மகன் சதீஷ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டாமுத்தூரில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என, தி.மு.க. மேலிடம் உத்தரவிட்டுள்ளது. அதனால், அக்கட்சியினர் தீவிரமாக வேலை செய்கின்றனர். அ.தி.மு.க. தன் கோட்டையை தக்கவைக்குமா அல்லது தி.மு.க. வரலாறு படைக்குமா என்று மே மாதம் தெரியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us