/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கையை அறிய பறவைகளை தேடலாம்! அழைப்பு விடுக்கிறார் டி.எப்.ஓ.,
/
இயற்கையை அறிய பறவைகளை தேடலாம்! அழைப்பு விடுக்கிறார் டி.எப்.ஓ.,
இயற்கையை அறிய பறவைகளை தேடலாம்! அழைப்பு விடுக்கிறார் டி.எப்.ஓ.,
இயற்கையை அறிய பறவைகளை தேடலாம்! அழைப்பு விடுக்கிறார் டி.எப்.ஓ.,
ADDED : டிச 04, 2024 11:02 PM

கோவை; வனத்தின் வளமைக்கு, பறவைகள் எப்படி உதவி புரிகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்,'' என, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், பொதுமக்கள், மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வாழ்விட சீரழிவு, ரசாயன அசுத்தம், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், வன வளம் குறைந்து போதல், வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்கள், பறவையினங்கள் அழிந்து போக முக்கிய காரணமாகிறது.
இப்படி, அழிவின் பட்டியலில் உள்ள பறவைகள் குறித்து ஓவியங்களாக, அவிநாசி சாலையில் உள்ள கஸ்துாரி சீனிவாசன் கலை அரங்கத்தில் காட்சிப்படுத்தியுள்ளார், கோவை வடவள்ளியை சேர்ந்த ஓவியர் சுரேஷ் ராகவன்.
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், சங்கர் அண்ட் அசோசியேட்ஸ் நிறுவனர் ரமணி சங்கர் ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
வரும் 8ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. நீலகிரி ஈப்பிடிப்பான், நிக்கோபர் காட்டு ஈப்பிடிப்பான், வெண்புருவ புதர் சிட்டு, அந்தமான் கிரேக், நீலகிரி காட்டு புறா, செந்தலை வாத்து, சில்லெமின் ரோஸ் பிஞ்ச் உட்பட அழிவின் பட்டியலில் உள்ள 139 வகையான பறவைகளை, ஓவியங்களாக வரைந்து காட்சிப்படுத்தியுள்ளார்.
மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது:
வாழ்க்கையின் சங்கிலி தொடருக்கு, பறவைகள் மிக முக்கியம். நம்மை சுற்றி ஏராளமான பறவைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை ரசிக்க மறக்கிறோம். வனத்தின் வளமைக்கு, பறவைகள் எப்படி உதவி புரிகின்றன என்பதை, தெரிந்து கொள்ள வேண்டும்.
மொபைல் போன்களில், அதிக நேரம் செலவிடுவதை விட்டு விட்டு, இயற்கையை பற்றி சில விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், பறவைகள் குறித்த தேடல் சிறந்ததாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.