/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விடுமுறையில் குழந்தைகளை நுாலக உறுப்பினர் ஆக்கலாமே!
/
விடுமுறையில் குழந்தைகளை நுாலக உறுப்பினர் ஆக்கலாமே!
விடுமுறையில் குழந்தைகளை நுாலக உறுப்பினர் ஆக்கலாமே!
விடுமுறையில் குழந்தைகளை நுாலக உறுப்பினர் ஆக்கலாமே!
ADDED : ஏப் 14, 2025 11:19 PM
கோவை; கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் நூலகங்களில் குழந்தைகளை உறுப்பினராக சேர்க்கலாம் என, புத்தக விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான பள்ளிகளில் கோடை விடுமுறை துவங்கியுள்ளது. கோடையை பயனுள்ள வகையில் கழிக்க, பெற்றோர் தங்கள் குழந்தைகளை கோடை கால சிறப்பு முகாம்களில் சேர்ப்பது வழக்கம்.
குழந்தைகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களை நூலக உறுப்பினராக சேர்க்கலாம் என, புத்தக விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
பொதுவாகவே வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது. குழந்தைகளை புத்தகம் வாசிக்க ஊக்குவிக்க, அவர்களை நூலகத்துக்கு அழைத்துச் செல்லலாம்.
ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிலும் கிளை நூலகங்கள், பகுதி நேர நூலகங்கள் செயல்படுகின்றன. நூலகங்களில், குழந்தைகளை உறுப்பினராகச் சேர்த்தால், அவர்களுக்கு நூல்களின் அறிமுகம் கிடைக்கும்.
உறுப்பினராகச் சேராவிட்டாலும், நூலகத்திலேயே வாசிக்கலாம் என்றாலும், உறுப்பினராக சேர்ந்தால், புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்கவும், அவற்றைப் பத்திரமாக திருப்பிக் கொடுக்கவும், அடுத்தடுத்த நூல்களை தேடிப்பிடித்து வாசிக்கவும் தோன்றும்.
குழந்தைகளை நூலக உறுப்பினராக சேர்க்க, சிறப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள, நூலகத்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.
நூலகங்களும் குழந்தைகளை உறுப்பினர்களாகச் சேர்க்க, அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.