/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீரை சேமிப்போம்; நிலத்தடி நீரை காப்போம்! பள்ளிகளில் விழிப்புணர்வு
/
தண்ணீரை சேமிப்போம்; நிலத்தடி நீரை காப்போம்! பள்ளிகளில் விழிப்புணர்வு
தண்ணீரை சேமிப்போம்; நிலத்தடி நீரை காப்போம்! பள்ளிகளில் விழிப்புணர்வு
தண்ணீரை சேமிப்போம்; நிலத்தடி நீரை காப்போம்! பள்ளிகளில் விழிப்புணர்வு
ADDED : மார் 19, 2025 08:22 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மனிதசங்கிலி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமையில் நடந்தது. மாணவர்கள், மனிதசங்கிலியாக நின்று, விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி கோஷமிட்டனர்.
'வான் தரும் மழை; அதை வீணாக்குவது நம் பிழை. பசுமையை நேசிப்போம் காற்றை விலை கொடுத்து வாங்காமல் இருப்போம். வரவிருக்கும் தலைமுறைக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு நீர், என, வலியுறுத்தினர்.
பிளாஸ்டிக் ஒழிப்போம், துணிப்பையை பயன்படுத்துவோம். இன்று சேமிக்கப்படும் நீர் நாளை துடைக்கும் கண்ணீர், என, 60க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டனர்.
நீர், காற்று, மழை ஆகியவை பொக்கிஷங்கள், அவற்றை சேமிக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, அதற்கு பதிலாக மாற்றுப் பொருள்களான துணிப்பை, சணல் பை, சில்வர் பாத்திரங்கள், ஒயர் கூடை, காகித கூடை, காகிதப்பை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும், என, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
நீர் சேமித்தல் மற்றும் மரங்களை வெட்டக்கூடாது என்ற கருத்தில், மாணவர்கள் ஓவியம் வரைந்து வந்து காட்சிப்படுத்தினர். நீர் சேமித்தல் மரங்களை வெட்டக்கூடாது என, மாணவர்கள் நாடகம் நடித்து காண்பித்தனர். ஆசிரியர் கீதா, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
* ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமையாசிரியர் கிட்டுச்சாமி தலைமை வகித்தார்.உதவி தலைமையாசிரியர்கள் பத்மாவதி, மகாலட்சுமி, அறிவியல் ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, ஷோபனா ஆகியோர் பேசியதாவது:
மனிதனின் அத்தியாவசிய தேவையான தண்ணீரின் அளவு பற்றாக்குறையாக உள்ளது. மக்கள் தொகை பெருக்கம், கடுகளை அழித்தல் மற்றும் மழை நீரை சேமிக்காதது, ஈரநிலங்களை பராமரிக்காதது போன்றவை முக்கிய காரணமாக உள்ளன.
தண்ணீர் தேவைக்கு மரம் நடவு செய்து வளர்த்தல், மழைநீர் சேமித்தல், நிலத்தடிநீரை குறைவாக பயன்படுத்துதல் போன்ற செயல்பாடுகளால், தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும்.
நிலங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு சேர்ந்து நிலத்தடி நீர் சேமிப்பை மிகவும் பாதிக்கிறது. அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வீடுகளில் பறவைகளுக்கு, தினமும் உணவு மற்றும் நீர் வைக்க வேண்டும்.
தற்போது, வெயில் காலம் அதிகமாக இருப்பதால், மாணவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள இரண்டு, மூன்று வயதான மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, பேசினர். தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.