/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்தியன் என்று சொல்வோம் அழைக்கிறது 'அரட்டை'
/
இந்தியன் என்று சொல்வோம் அழைக்கிறது 'அரட்டை'
ADDED : அக் 26, 2025 02:50 AM

ச மூக வலைத்தள உலகில் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ள நிலையில், முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பான 'அரட்டை' என்ற புதிய மெசேஜிங் செயலி, இளைஞர்கள் மத்தியில் புயலை கிளப்பியுள்ளது.
ஜோஹோ கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ள இந்த செயலி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுப்பதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
டிரெண்டிங்கில்! #SwitchToArattai என்ற ஹேஷ்டேக் தற்போது வேகமாக பரவி வருகிறது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில், முன்னணியில் இருக்கும் அரட்டை, இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்று, சாதனை படைத்துள்ளது. தமிழ் பெயர், இந்தியத் தயாரிப்பு என்ற பெருமைகளுடன் இந்த செயலி, டிஜிட்டல் உலகில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது.
என்ன ஸ்பெஷல்? ' இந்தியர்களின் தகவல்கள், இந்தியாவிலேயே பாதுகாக்கப்படும்' என்ற உறுதியான கொள்கையுடன் ஜோஹோ நிறுவனம், இந்த செயலியை வடிவமைத்துள்ளது. இதனால், பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளதாக, தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சாதாரண மெசேஜிங் செயலிகளில் உள்ள, அனைத்து வசதிகளும் இதிலும் உண்டு. தனிநபர் மற்றும் குழு அரட்டைகள், வீடியோ அழைப்புகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்தல், ஸ்டேட்டஸ் அப்டேட் என, அனைத்தும் இதில் அடங்கும்.
இதன் முக்கிய சிறப்பம்சமே, குறைந்த இணைய வேகத்திலும் தடையின்றி செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டதுதான்.
வாட்ஸ்அப் போன்ற வெளிநாட்டு செயலிகளுக்கு, ஒரு சிறந்த மாற்று, அரட்டை என, தொழில்நுட்ப ஆர்வலர்களும், இளைஞர்களும் இதை ஆர்வத்துடன் பயன் படுத்த தொடங்கியுள்ளனர்.

