தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாற்றங்கால் அமைக்கலாம்!

நாற்றங்கால் அமைக்கலாம்!

நாற்றங்கால் அமைக்கலாம்!


ADDED : செப் 02, 2025 08:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2025 08:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி; கோவை மாவட்டத்தில், மரக்கன்று நாற்றங்கால் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி அறிக்கை:

மகரந்த சேர்க்கைக்கு சாதகமான சூழலை உருவாக்குதல், கார்பன் - நைட்ரஜன் விகிதத்தை பராமரித்தல், மண் வளம் காக்க, வேளாண் காடுகள் பேருதவி புரிகின்றன.

கோவை மாவட்டத்தில், மண்வளம், சீதோஷ்ண நிலை, மழைப்பொழிவுக்கு ஏற்ற மர வகைகளை, விவசாயிகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மகாகனி, சந்தனம், செம்மரம், தேக்கு, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகளுக்கு, ரூ.16 லட்சத்தில், 2.5 ஏக்கரில் நாற்றங்கால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிழல் வலை அமைத்தல், மிஸ்ட் சேம்பர், தாய் நாற்றங்கால் அமைத்தல், தெளிப்பு நீர் பாசனம் அமைத்தல், வேலி அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள், வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us