ADDED : ஜூன் 22, 2026 05:52 AM
வால்பாறை: வால்பாறை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில், 'ஆன்லைன்' வாயிலாகவும், நேரடியாகவும் புதிய மாணவர்கள் சேர்க்கை, கடந்த 16ம் தேதி முதல் நடக்கிறது. தொழில் பயிற்சி நிலையத்தில் எலக்ட்ரீசியன், பிட்டர், பேஷன்டெக்னாலஜி, டெக்ஸ்டைல் மெக்கட்ரானிக்ஸ் உள்ளிட்ட நான்கு பாடப்பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில், 14 வயது முதல் 40 வயது வரையான மாணவர் சேரலாம்.
தொழில் பயிற்சி நிலைய முதல்வர்(பொ) நதிசந்திரன் கூறியதாவது:
வால்பாறை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு, சீருடை மற்றும் மாதம் தோறும் கல்வி உதவித்தொகையாக, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இது தவிர, தமிழ்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டததின் கீழ், மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு மாணவர்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, கூறினார்.
