ADDED : ஜூன் 22, 2026 05:53 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் வேளாண்துறை வாயிலாக நடமாடும் மண் மற்றும் நீர் பரிசோதனை முகாம் இன்று நடக்கிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. சாகுபடியில் நல்ல விளைச்சல் பெற மண் மற்றும் நீர் பரிசோதனை அவசியமாகும். தற்போது பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் வேளாண்துறை வாயிலாக நடமாடும் மண் மற்றும் நீர் பரிசோதனை வாகனம் வாயிலாக முகாம் நடக்கிறது.
இன்று 22ம் தேதி, காலையில் கிட்டசூராம்பாளையத்திலும், மதியம் என்.சந்திராபுரம் கிராம ஊராட்சி அலுவலகத்தில் மண் பரிசோதனை செய்யப்படுகிறது.
நாளை, 23ம் தேதி, காலையில் சேர்வக்காரன்பாளையம் கிராமத்திலும், மதியம் புரவிபாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலத்திலும் முகாம் நடக்கிறது. மண் மற்றும் நீர் ஆய்வுக்கு தலா, 30 ரூபாய் கட்டணம் வழங்க வேண்டும். எனவே, விவசாயிகள் மண் மற்றும் நீர் மாதிரிகளை எடுத்து வந்து ஆய்வு செய்து பயன்பெறுமாறு, பொள்ளாச்சி வடக்கு வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
