/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர்களிடம் விதம் விதமாக காசு வாங்காம ஓட்டுப்போடுவோம்! மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு
/
வாக்காளர்களிடம் விதம் விதமாக காசு வாங்காம ஓட்டுப்போடுவோம்! மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு
வாக்காளர்களிடம் விதம் விதமாக காசு வாங்காம ஓட்டுப்போடுவோம்! மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு
வாக்காளர்களிடம் விதம் விதமாக காசு வாங்காம ஓட்டுப்போடுவோம்! மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு
ADDED : மார் 26, 2024 11:44 PM

கோவை:நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், கோவையில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க,
வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, தீவிரப்படுத்தியுள்ளது
மாவட்ட நிர்வாகம். இம்முறை, 'காசு வாங்காமல் அனைவரும் ஓட்டுப்போடுவோம்'
என்ற பிரசாரத்தை கையிலெடுத்துள்ளது.
கோவையில், 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், 63.84 சதவீத ஓட்டுகளே பதிவானது. இது, 2014ல் நடந்த தேர்தலை காட்டிலும், 4.33 சதவீதம் குறைவு.
அதனால், 30 சதவீதம், 40 சதவீதம், 50 சதவீதம் என, குறைவான ஓட்டுகள் பதிவான ஓட்டுச்சாவடிகளை, தேர்தல் பிரிவினர் அடையாளம் கண்டறிந்துள்ளனர்.
இப்பகுதி வாக்காளர்கள் ஓட்டுப்போட வராததற்கு என்ன காரணம்; என்ன பிரச்னை ஏற்படுகிறது; துாரம் அதிகமாக இருக்கிறதா என கள ஆய்வு செய்துள்ளனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
ஓட்டு சதவீதத்தை அதிகப்படுத்த, வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை, மாவட்ட தேர்தல் பிரிவினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
பிரபலமானவர்கள் மூலம் வீடியோ ஒளிப்பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது. மக்கள் அதிகமாக கூடுமிடங்களில் அவற்றை ஒளிபரப்ப, பிரசார வாகன இயக்கம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. நேற்று, 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பலுான் பறக்க விடப்பட்டது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
காசு வாங்காம ஓட்டு
பஸ்கள் மற்றும் ஆட்டோக்களில், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. 'காசு வாங்காம ஓட்டுப்போடுவோம். விரல் மேல் மை ஓட்டு; அதையே உனது குரலாக மாற்று, வலிமையான எதிர்காலம் உண்டு; வலிமையான நம் ஓட்டினால்' என்கிற விழிப்புணர்வு வாசகங்களுடன், மக்கள் கூடுமிடங்களில், பிளக்ஸ் பேனர் வைக்கப்படுகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, 18-19, 19-29 வயது இளைஞர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருக்கிறோம்; அவர்கள் அனைவரையும் ஓட்டளிக்க வர வைக்க வேண்டும் என்கிற முயற்சி எடுக்கிறோம்.
நகர்ப்புற பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக இருக்கிறது. வீடியோ தயாரித்து, விழிப்புணர்வு வாகனங்கள் மூலம் ஒளிபரப்ப இருக்கிறோம்.
கேட்டட் கம்யூனிட்டியில்...
ரேஸ்கோர்ஸில் உள்ள மீடியா டவர் மூலம் ஒளிபரப்புகிறோம். ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்களை ஒருங்கிணைத்து, 'வாட்ஸ் அப்' குரூப் உருவாக்கியிருக்கிறோம்.
அதிக வருவாய் ஈட்டும் மக்கள் வசிக்கும் கேட்டடு கம்யூனிட்டி பகுதியில் ஓட்டு சதவீதம் குறைவாக இருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள் மூலம் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அதிக வருவாய் ஈட்டும் மக்கள் வசிக்கும் கேட்டடு கம்யூனிட்டு பகுதியில் ஓட்டு சதவீதம் குறைவாக இருக்கிறது. மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள் மூலம் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

