தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு

2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு

2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வு


ADDED : பிப் 08, 2024 10:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 10:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை -இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் நடைபெற்ற போட்டிகளில், 437 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 2ம் நிலை காவலர்கள், சிறை காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிச., மாதம் நடந்தது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 2ம் கட்டமாக உடற்தகுதி, கோவை உள்பட, 4 இடங்களில் கடந்த, 5ம் தேதி துவங்கி நாளை வரை நடக்கிறது.

கோவையில் பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு, கோவை நேரு ஸ்டேடியத்திலும், ஆண்களுக்கான உடற்தகுதி தேர்வு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திலும் நடந்து வருகிறது.

முதல் நாள் நடந்த உடற்தகுதி தேர்வில், 308 பெண்கள், 320 ஆண்கள் பங்கேற்றனர். அதில், 232 பெண்களும், 210 ஆண்களும் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வு, நேற்று நடந்தது. 229 பெண்கள், 208 ஆண்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கு, 100, 400 மீ., ஓட்டப்பந்தயம், கயிறு ஏறும் போட்டி, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், பெண்களுக்கு, 100, 200 மீ., ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டதல் நடத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us