ADDED : ஜன 01, 2025 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் : கணியூர் ஊராட்சியில், வளர்ச்சி பணிகள் துவக்க விழா நடந்தது. பொன்னாண்டாம்பாளையம் கிராமத்தில், 14 லட்சத்து, 25 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட நுாலக கட்டடத்தை, எம்.பி., ராஜ்குமார் திறந்து வைத்தார்.
செல்லப்பம் பாளையம் உயர் நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், அங்கன்வாடி மையத்தில் கோபர்தன் காஸ், சுகாதார வளாகங்கள், தானியங்கி கேட்வால்வ், 60 ஆயிரம் லிட்டர் தரைமட்ட தொட்டி, பல பகுதிகளில்தானியங்கி மோட்டார் இயக்கம் ஆகியன துவக்கி வைக்கப்பட்டன. ஊராட்சி தலைவர் வேலுசாமி, துணைத்தலைவர் ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

