/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 தளங்களுடன் நுாலகம்: ஜனவரியில் திறக்க திட்டம்
/
8 தளங்களுடன் நுாலகம்: ஜனவரியில் திறக்க திட்டம்
ADDED : நவ 27, 2025 05:25 AM

கோவை: காந்திபுரத்தில் எட்டு தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் நுாலகத்தை, அடுத்தாண்டு ஜனவரியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காந்திபுரத்தில், 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது. இதன் அருகாமையில் 6.98 ஏக்கரில், 1.98 லட்சம் சதுரடியில் எட்டு தளங்களுடன் நுாலகம் மற்றும் அறிவியல் மையம் தமிழக பொதுப்பணித்துறையால் கட்டப்படுகிறது.
எட்டு தளங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன. போலீஸ் ஸ்டேஷன் அமைந்திருந்த இடத்தில், அலங்கார நுழைவாயில் சுவர்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அவ்விடத்தில் நன்கு வளர்ந்த மரங்கள் உள்ளன. கட்டுமான பணிக்கு இடையூறாக உள்ள மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்து, வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜன., மாதம் நுாலகம் திறக்கப்படும் என,முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருக்கிறார்.

