/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எல்.ஐ.சி., முகவர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 10:02 PM

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய எல்.ஐ.சி., முகவர்கள் சங்கத்தினர், கோவை அவிநாசி ரோடு எல்.ஐ.சி., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
'அனைத்து முகவர்களுக்கும் 'மெடி கிளைம்' வசதி செய்து கொடுக்க வேண்டும். 70 வயதுக்கு மேற்பட்ட முகவர்களுக்கு குழு காப்பீடு பலன் வழங்க வேண்டும். பாலிசி மீதான சேவை வரியை நீக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் எல்.ஐ.சி., பாலிசி எடுக்கும் வகையில் ஒரு லட்சம் காப்பீட்டு பாலிசிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும்' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள், ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கோவை கோட்ட துணை செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். போத்தனுார் கிளை செயலாளர் மயில்சாமி முன்னிலை வகித்தார். கோவை கோட்ட செயலாளர் கோவர்த்தன், கோரிக்கைகள் குறித்து பேசினார். 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.