/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி.,: ஈஷா யோகா மையத்தில் படப்பிடிப்பு
/
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி.,: ஈஷா யோகா மையத்தில் படப்பிடிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி.,: ஈஷா யோகா மையத்தில் படப்பிடிப்பு
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி.,: ஈஷா யோகா மையத்தில் படப்பிடிப்பு
ADDED : பிப் 01, 2024 04:09 AM
கோவை : ஈஷா யோகா மையத்தில் எல்.ஐ.சி., திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உள்ள நிலையில், சத்குருவை, நடிகர் சீமான் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர், போடா, போடி, நானும் ரவுடிதான், தானா சேந்த கூட்டம், காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது எல்.ஐ.சி., (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் எஸ்.ஜே.சூர்யா, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கடந்த மாதம் இப்படத்துக்கு பூஜை நடந்து, படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் கோவையில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.
ஒரு வார காலம் நடந்த படப்பிடிப்பில், பிரதீப் ரங்கநாதன், நடிகர் சீமான் ஆகியோர் தொடர்புடைய காட்சிகள் படமாக்கப்பட்டன.
குறிப்பாக சத்குருவின் இல்லம், உள்ளிட்ட பிரதானப் பகுதிகளில் படப்படிப்பு நடத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பில், சீமான் தரப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன.
படப்பிடிப்பு முடிந்து, தற்போது குழுவினர் சென்னை சென்றனர்.அடுத்த மாதம் மீண்டும் ஈஷா யோகா மையத்தில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. அச்சமயம், சத்குரு, நடிகர் சீமான் இடையே சந்திப்பு நடக்கலாம் என, தெரிவிக்கப்படுகிறது.