/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்வியல் பயிற்சி முகாம் ; மாணவர்கள் பங்கேற்பு
/
வாழ்வியல் பயிற்சி முகாம் ; மாணவர்கள் பங்கேற்பு
ADDED : நவ 12, 2024 05:42 AM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி உட்பட 3 இடங்களில், வாழ்வியல் பயிற்சி முகாம் நடந்தது. இதில், ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை, பொள்ளாச்சி கல்வி மாவட்டம், சேவாலயம் அறக்கட்டளை சார்பில் நீடித்த நிலையான வாழ்வியல் பயிற்சி முகாம் பொள்ளாச்சி, அட்டகட்டி, கோவை உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
இதில், மாவட்ட முதன்மை கல்வி அனுவலர் பாலமுரளி கலந்து கொண்டார். குறிப்பாக, மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளைச்சேர்ந்த ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய பசுமைப் படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவ்வகையில், முகாமில், மூங்கில் வாயிலாக கைவினைப்பொருட்கள் தயாரித்தல், சாண எருவில் இருந்து விபூதி தயாரித்தல், சோலார் மின்சக்தி தயாரித்தல், இயற்கை உரம் தயாரித்தல், மியாவாக்கி காடு அமைத்தல் என, பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும், வனப்பகுதியில் களப்பயணம் மேற்கொண்டு, பறவையினங்கள் கண்டறிதல், பல்லுயிர் பெருக்கம், வனவிலங்கு வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு விவசாய பல்கலையில், உயிர் உரம், உயிர் உர உற்பத்தி பிரிவு, மண்புழு உரம் அலகு- சார்பிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பேராசிரியர் சவுமியா ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.