ADDED : ஜன 23, 2024 01:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஒடிசா மாநிலம், லுார்து பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் நாயக், 33. கோவை மாவட்டம், சூலுார் அருகேயுள்ள கள்ளபாளையத்தில்,மனைவி ரூனுவுடன்,32, தங்கியிருந்து அடுப்பு கரி தயாரிக்கும் கம்பெனியில்வேலை செய்து வந்தார். கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கடந்த 2021, ஜன., 3ல் மீண்டும் பிரச்னை ஏற்படவே, ரூனுவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார்.
சூலுார் போலீசார் விசாரித்து, சுதர்சனை கைது செய்து, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட சுதர்சனுக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

