/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணை வெட்டி கொன்ற முதியவருக்கு ஆயுள்சிறை; கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு

ADDED : ஆக 29, 2025 12:50 AM
கோவை; கோவையில் பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவருக்கு ஆயுள்சிறை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
கோவை, மதுக்கரை மார்க்கெட், சுந்தராபுரம் ரோட்டில், வசித்து வருபவர் பேச்சிமுத்து,65; இவருக்கும், அதே பகுதியில் வசித்த கணவனை இழந்த வசந்தகுமாரி, 50 என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு மற்றொருவருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு பேச்சிமுத்து அடிக்கடி தகராறு செய்தார். கடந்த 2024,மார்ச், 15 ல், பேச்சிமுத்து தனது வீட்டிற்கு, வசந்தகுமாரியை அழைத்து சென்றார். அப்போது, அவர்களுக்கிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
பேச்சிமுத்து ஆத்திரமடைந்து வசந்தகுமாரியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து, பேச்சிமுத்துவை கைது செய்து சிறையிலடைத்தனர். அவர் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி சுந்தரராஜ், குற்றம் சாட்டப்பட்ட பேச்சிமுத்துவிற்கு ஆயுள்சிறை, 500 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.