/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவி கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் சிறை
/
மனைவி கொலை வழக்கில் கணவனுக்கு ஆயுள் சிறை
ADDED : பிப் 01, 2024 12:04 AM
கோவை : கோவை அருகேயுள்ள பாப்பம்பட்டி, ஸ்ரீ தேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்,64; கூலித்தொழிலாளி. இவருக்கும், மனைவி பத்மாவதிக்கும்,58, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
2020, டிச.,7ல், ஆறுமுகம் வேலைக்கு சென்று வீட்டுக்கு வந்து சாப்பாடு கேட்டிருக்கிறார். அப்போது, மனைவி பத்மாவதி சமையல் செய்யாதது தெரிய வந்தது.
இது பற்றி கேட்ட போது, அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆறுமுகம், மது பாட்டிலால் பத்மாவதியை குத்தி கொலை செய்தார். சூலுார் போலீசார் விசாரித்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.
அவர் மீது, கோவை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.