தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழிலாளிக்கு ஆயுள் சிறை

தொழிலாளிக்கு ஆயுள் சிறை

தொழிலாளிக்கு ஆயுள் சிறை


ADDED : செப் 27, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், ஆனைமலை அருகேயுள்ள கணபதிபாளையம், காந்தி நகரில் வசித்து வந்தவர் கார்த்திக், 22. மீனாட்சிபுரம் ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், 2016, செப்., 14ல், கார்த்திக் மற்றும் இவரது நண்பர் பிரகாஷ் என்பவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாப்பன் என்ற சுதன்,55, குடி போதையில் வந்து கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டார். அவரை கீழே தள்ளி, கல் மீது தலையை மோதி கொலை செய்தார்.

ஆனைமலை போலீசார் விசாரித்து, சுதன் மீது கொலை வழக்கு பதிந்து கைது செய்தனர். அவர் மீது, கோவையிலுள்ள குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றம் சாட்டப்பட்ட சுதனிற்கு, ஆயுள்சிறை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us