sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'வாழ்க்கை என்பதே பெருங்கனவு'

/

'வாழ்க்கை என்பதே பெருங்கனவு'

'வாழ்க்கை என்பதே பெருங்கனவு'

'வாழ்க்கை என்பதே பெருங்கனவு'


ADDED : அக் 11, 2025 11:08 PM

Google News

ADDED : அக் 11, 2025 11:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம், முனைவர் சர்வோத்தம சச்சிதானந்த நாதேஸ்வர சுவாமிகள் எழுதிய, 'கனவுகளின் உட்கிடக்கை' என்ற நுால் குறித்து, இலக்கிய விமர்சகர் புனிதவதி, தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

கனவுகள் என்றால் எல்லோருக்கும் ஒரு பரவசம் ஏற்படும். கனவில் வருவது புதிராக இருக்கும். கனவுகளின் அர்த்தங்களை தெளிவாக இந்த நுால் விளக்குகிறது. ஆங்கிலத்தில் கனவுகள் மற்றும் உளவியல் சார்ந்த புத்தகங்கள், நிறைய வந்துள்ளன. பலர் கனவுகள் பற்றி ஆராய்ந்துள்ளனர்.

இதில் குறிப்பாக, சிக்மண்ட் பிராய்டுடைய 'கனவுகளின் விளக்கம்' ஒரு முக்கியமான புத்தகம். இந்த நுாலாசிரியர் உளவியல் நோக்கிலும், தத்துவியல் நோக்கிலும் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்.

கனவுகள் பற்றி நாம் அறியாத, பல கருத்துகள் இந்த நுாலில் உள்ளன. பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையில், கனவுகள் நமக்குள் எப்படி உருவாகின்றன என்பதை, தத்துவார்த்த அடிப்படையில் இந்த நுால் விளக்குகிறது.

கனவு உண்மை போல் இருக்கிறது. இது உண்மையா, கற்பனையா, வேறு ஏதோ ஒன்றா என்று சந்தேகம் நமக்குள் எழுகிறது.

உளவியலாளர்கள், உள்ளத்தில் நிகழ்வதுதான் கனவு என்கின்றனர். இந்த நுாலாசிரியர் கனவு உயிருக்குள் நிகழ்கிறது என்கிறார்.

உயிரில் கடந்த கால நிகழ்வுகள், நிகழ்கால, எதிர்கால நிகழ்வுகள் இவை முன்றும் பதிவாகி இருக்கிறது என்கிறார்.

முளையின் மையம், உள்ளத்தின் மையம், உயிரின் மையம் இவைகளில் இருந்து, கனவுகள் உருவாகி வெளிப்படுகிறது என்று விளக்குகிறார்.

உயிர் மையம் வழியாக வெளிப்படும் கனவுகளை, அறிந்தவர்கள் ஞானம் பெற்றவர்கள். உடல், உள்ளம், உயிர் இவை மூன்றும் ஒரே நேர் கோட்டில் இணைவதை உணர்ந்தவர்களால், மூன்று காலத்தின் நிகழ்வுகளையும் அறிய முடியும் என்கின்றனர்.

மனித இனத்துக்கு சிந்தனைதான் அடித்தளம். அது இல்லை என்றால் அடுத்த பரிணாம வளர்ச்சியை அடைய முடியாது. இந்திய மரபில் தோன்றிய ஞானிகள், யோகிகள், இதை அறிந்து இருந்தனர். அதனால் தான் இத்தனை ஆன்மிக தத்துவங்களையும், இதிகாசங்களையும் உருவாக்க முடிந்தது.

பூஜை, தியானம், தவம், ஞான மார்க்கம் எல்லாம் இந்த எண்ணங்கள் வழியாகத்தான் தோன்றுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்தி, தன்ளை உணரும் போது, நமக்குள் ஆற்றல் பிறக்கிறது.

ஒருவருக்கு தோன்றும் கனவு மற்றவர்களுக்கும் தோன்றும் என்று சொல்ல முடியாது. எண்ணங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது என்கிறார். பாம்புகள் பற்றிய கனவுகள் பலருக்கு தோன்றும். அது பற்றி சிக்மன்ட் பிராய்டு பால் உணர்வு சார்ந்தது என்கிறார்.

இந்த நுாலாசியர், உயிர் ஆற்றல் மேம்படுவதை உணர்த்துகிறது என்கிறார். கனவுகள் பற்றி ஆழமாக விளக்கும் நுால்கள் தமிழில் எழுதப்படவில்லை. இந்த நுால் அந்த குறையை நிறைவேற்றி உள்ளது.

கனவுகள் பற்றி நாம் அறியாத, பல கருத்துகள் இந்த நுாலில் உள்ளன. பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையில், கனவுகள் நமக்குள் எப்படி உருவாகின்றன என்பதை, தத்துவார்த்த அடிப்படையில் இந்த நுால் விளக்கிறது.கனவு உண்மை போல் இருக்கிறது. இது உண்மையா, கற்பனையா, வேறு ஏதோ ஒன்றா என்று சந்தேகம் நமக்குள் எழுகிறது.






      Dinamalar
      Follow us