/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழ்நாள் முழுவதும் கற்றலை நிறுத்தக்கூடாது
/
வாழ்நாள் முழுவதும் கற்றலை நிறுத்தக்கூடாது
ADDED : நவ 24, 2024 11:43 PM

கோவை; பிச்சனுார் ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், 11வது பட்டமளிப்பு விழா நடந்தது.
ஜெ.சி.டி., கல்வி நிறுவனங்களின் தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் ஒடிசா பிஜு பட்நாயக் தொழில்நுட்ப பல்கலையின் துணை வேந்தர் அமிய குமார் ராத் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசுகையில், ''கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான வாழ்நாள் செயலாக இருக்க வேண்டும். தங்கள் கல்வி அறிவை, சமூகத்தின் அடித்தட்டு மக்களை உயர்த்துவதற்காக, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். ஏ.பி.ஜே., அப்துல் கலாம், மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர் ஆகியோரைப் போல், மாணவர்கள் தங்களுடைய லட்சியத்தை அடைவதோடு, நாட்டையும் உயர்த்த வேண்டும்,'' என்றார்.
விழாவில் அண்ணா பல்கலையின் தரவரிசையில் இரண்டு முதல் நான்காம் இடங்கள் முறையே பிடித்த மாணவர்கள் ராகுல், அப்துல் ஹம்ஸா, தேஜாவு மற்றும் ஆறாம் பிடித்த மாணவி சவுமியா கவுரவிக்கப்பட்டனர். 218 இளங்கலை பொறியியல் மற்றும் 15 முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
கல்லுரி முதல்வர் மனோகரன், நிர்வாகத்தினர், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.