/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
/
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ADDED : ஜூன் 11, 2025 07:31 PM
கோவை; ஜப்பானிய தொராசிக் அறுவை சிகிச்சை சங்கம் (ஜே.ஏ.டி.எஸ்.,)சார்பில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், 78வது வருடாந்திர அறிவியல் கூட்டம் வரும் அக்., 23 ம் தேதி நடக்கிறது.
இதில், ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் டாக்டர் பழனிவேலுக்கு, வெளிநாட்டு கவுரவ உறுப்பினர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜப்பான் முழுவதும் அறுவை சிகிச்சை முறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, லேப்ராஸ்கோபிக் உணவுக்குழாய் அறுவை சிகிச்சையில், சிறந்த பங்களிப்புக்காக டாக்டர் பழனிவேலுவை கவுரவிக்கிறது.
விழாவில் விருதைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், 'லேப்ராஸ்கோபிக் ரோபோடிக் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை; தற்போதைய போக்குகள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம்' என்ற தலைப்பில், ஒரு முக்கிய சொற்பொழிவை வழங்கவும், டாக்டர் பழனிவேலு அழைக்கப்பட்டுள்ளார்.