/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
/
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
ஜெம் மருத்துவமனை தலைவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது
ADDED : ஜூலை 09, 2025 10:26 PM

கோவை: ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3234 சார்பில், சென்னையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
விழாவில், மருத்துவத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ஜெம் மருத்துவமனைகளின் தலைவர் பழனிவேலுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் வினோத் சராகி, விருதை வழங்கினார். இந்த விருது, லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோ மூலம் செய்யப்படும் இரைப்பைக்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில், அவரது முன்னோடிப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டது.
டாக்டர் பழனிவேலு பேசுகையில், '' லேப்ரோஸ்கோபி மற்றும் ரோபோ அறுவை சிகிச்சை கண்டுபிடிப்புகளால், ஆரம்பகால புற்றுநோய்கள் தற்போது முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவையாக உள்ளன,'' என்றார்.