தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘ஒளிரும் பொள்ளாச்சி’; மாற்றத்தை உருவாக்கும்! பசுமையை காக்க உறுதியேற்பு

‘ஒளிரும் பொள்ளாச்சி’; மாற்றத்தை உருவாக்கும்! பசுமையை காக்க உறுதியேற்பு

‘ஒளிரும் பொள்ளாச்சி’; மாற்றத்தை உருவாக்கும்! பசுமையை காக்க உறுதியேற்பு


ADDED : செப் 25, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு எல்லாம் மரக்கன்றுகள் நட வேண்டும், என, ‘ஒளிரும் பொள்ளாச்சி’ அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை அறக்கட்டளை துவக்க விழா மற்றும் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ அறிமுக விழா, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. தொழில்வர்த்தக சபை தலைவர் முத்துசாமி வரவேற்றார்.

பண்ணாரி அம்மன் குழுமம் தலைவர் பாலசுப்ரமணியம், ‘ஒளிரும் பொள்ளாச்சி’க்காக, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை நன்கொடையாக வழங்கி பேசியதாவது:

உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த அனைவரது பங்களிப்பு அவசியமாகும். வீணாகும் காய்கறிகளை இயற்கை உரமாக்க முடியும். பிளாஸ்டிக், 100 ஆண்டுகள் ஆனாலும் மக்காது. அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது பள்ளி மாணவர்களிடம் இருந்து துவங்கப்பட உள்ளது. இதற்கான திட்டங்களும் இந்த அமைப்பு வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் குப்பை தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வீட்டில் இருந்து மாற்றம் ஏற்பட்டால் தெருவில், நகரில் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

இந்த அமைப்பு வாயிலாக திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வுடன், மரக்கன்றுகளை நடும் முயற்சியை எடுக்க வேண்டும். எங்கெல்லாம் இடம் உள்ளதோ அங்கு எல்லாம் மரக்கன்றுகள் நட வேண்டும். வெப்ப நிலை குறைத்து, பசுமையாக மாற்ற அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

எம்.எல்.ஏ., நித்தியானந்தன் பேசியதாவது:

மாற்றம் அனைவரிடமும் ஏற்படும் போது, நிச்சயம் மாற்றத்தை உருவாகும். எண்ணங்கள் வலிமையாகும் போது நம்மால் எதையும் செய்ய முடியும். தண்டனைகளால் அனைவரையும் மாற்ற முடியாது; மன மாற்றத்தால் தான் மாற்றம் ஏற்படும்.

பொள்ளாச்சி தொகுதிக்கு தேவையான அனைத்து பணிகளுக்கும், மாவட்டமாக்கவும் முயற்சி எடுப்பேன். ‘ஒளிரும் பொள்ளாச்சி’க்கான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.

இவ்வாறு, பேசினார்.

பேச்சாளர் கவிதாசன், ‘ஒளிரும் கோவை’ மேலாண்மை அறங்காவலர் பத்மநாபன் உட்பட பலர் பேசினர். தொழில்வர்த்தக சபை நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us